கிளிப்போர்டைப் பகிர்தல்

Clipboard செயல்படுத்தப்பட்டிருக்கும் போது, நீங்கள் உரையை நகலெடுக்கலாம், ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம், அல்லது ஒரு புகைப்படத்தைப் படம்பிடிக்கலாம், பின்னர் அதை உடனடியாக இணைக்கப்பட்ட PC மற்றும் Android சாதனங்களில் உள்ள ஆவணம் அல்லது மின்னஞ்சலில் ஒட்டலாம்.

  1. PC-ஐ Android சாதனத்துடன் இணைக்கவும்.
  2. உங்கள் PC-இல், Smart Connect-ஐத் திறந்து, கோப்புகள் தாவலுக்குச் சென்று, பின்னர் Clipboard-ஐக் கிளிக் செய்யவும். Clipboard ஆனது செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
  3. உங்கள் Android சாதனத்தில், Smart Connect-ஐத் திறந்து அமைப்புகள் > கோப்புகள் > பகிர்வு அம்சம்என்பதற்குச் சென்று, பின்னர் Clipboard-ஐச் செயல்படுத்தவும். மேலும் நம்பகமான சாதனம் என்பதற்குச் சென்று Clipboardஉள்ளடக்கத்தை ஒத்திசைக்க வேண்டிய சாதனங்களைத் தேர்வுசெய்யவும்.
  4. இணைக்கப்பட்ட ஏதேனும் ஒரு சாதனத்தில், உரை அல்லது கோப்பை நகலெடுக்கவும், ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும், அல்லது ஒரு புகைப்படத்தைப் படம்பிடிக்கவும்.
  5. Smart Connect ஆனது கோப்புகள் > Clipboard-இல் இரண்டு சாதனங்களிலும் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது, மேலும் நீங்கள் அதை ஒரு கோப்புறை அல்லது ஆவணத்தில் ஒட்டலாம்.
  6. கிளிப்போர்டில் ஏற்கனவே நகலெடுக்கப்பட்ட ஒன்றை ஒட்ட, Clipboard வரலாற்றில் அதைத் தட்டி அல்லது கிளிக் செய்து, ஒட்டவும். Smart Connect ஆனது உங்களின் கடைசி ஐந்து கிளிப்களை ஒரு மணிநேரம் வைத்திருக்கும்.

கிளிப்போர்டு பகிர்வை இடைநிறுத்த, -ஐத் தட்டி, கிளிப்போர்டு இடைநிறுத்தப்பட்டது-ஐச் செயல்படுத்தி இடைநிறுத்தத்தின் கால அளவை அமைக்கவும்.

அனைத்துச் சாதனங்களுடனும் கிளிப்போர்டைப் பகிர்வதை நிறுத்த, அமைப்புகள் > கோப்புகள்என்பதற்குச் சென்று, Clipboard-ஐ முடக்கவும்.

பல சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் Android சாதனத்தில் அமைப்புகள் > கோப்புகள் > பகிர்வு அம்சம் > நம்பகமான சாதனம் என்பதற்குச் சென்று, நீங்கள் இனி பகிர விரும்பாத சாதனத்தைத் தேர்வுநீக்கவும்.